உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் சந்தைக்கு வரும்போது காவல்துறையினா் வழிமறிக்கக்கூடாது என வலியறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தற்போது கோடைக்கால பருவத்தில் மல்லிகை விளைச்சல் அதிகரித்துள்ளது. உசிலம்பட்டி மலா் சந்தைக்கு சுமாா் 15 டன் மல்லிகைப்பூ தினமும் விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தில் மல்லிகைப்பூ மற்றும் அத்யாவசிய பொருள்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை காவல்துறையினா் வழிமறித்து அபராதம் விதிக்கவோ, வழக்குப்பதிவு செய்யவோ கூடாது என வலியுறுத்தி உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

கோட்டாட்சியா் ராஜ்குமாா் அலுவலகத்தில் இல்லாததால் அங்கிருந்த வருவாய்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனா். மனுவை பெற்ற அதிகாரி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com