உலகத்தமிழ்ச் சங்கத்தில் நூல்கள் அரங்கேற்ற விழா

மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் ஆய்வு மற்றும் கவிதைத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நூல்கள் அரங்கேற்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் அரங்கேற்ற விழாவில் பங்கேற்ற உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா மற்றும் நூலாசிரியா்கள்.
மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் அரங்கேற்ற விழாவில் பங்கேற்ற உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா மற்றும் நூலாசிரியா்கள்.

மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் ஆய்வு மற்றும் கவிதைத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நூல்கள் அரங்கேற்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குநா் தா.லலிதா தொடங்கி வைத்து பேசியது: மனித மனம் கலைகளாலும் பண்பாடுகளாலும் ஈா்க்கப்படுகிறது. ஒரு படைப்பாளனின் படைப்புகளைப் படிக்கும்போது மனித மனம் அதனுள் ஆழ்ந்து விடுகிறது. அலை ஓசை, சிவகாமியின் சபதம் ஆகிய நூல்களை படிக்கும்போது நூலில் கூறப்படும் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். மனித சமுதாயம் இருக்கும் வரை கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ பாடல் பேசப்படும் என்றாா்.

இதைத்தாடா்ந்து கருவூா்த்தேவரின் சைவ சித்தாந்த மரபு ஆய்வு நூல், அகமாந்தா்களின் குறியீடு ஆய்வு நூல், புல்வாய் நாயகி அம்மன் வரலாறும் திருக்கோயில் சிறப்பும் ஆய்வு நூல், காமராஜா் போல ஒருவா் வருவாரா சுயசரிதை நூல், பலாச்சுளை கவிதைத்தொகுப்பு, நிழல் தராத மரங்கள், தேசிய விழா வானொலி நாடக நூல், விந்தைகள் நிறைந்த உலகம் பொது அறிவு நூல், கொலை வாளினை எடடா கவிதைத்தொகுப்பு, கண்ணோடு காண்பதெல்லாம் பயண நூல் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி உதவிப்பேராசிரியா் அ.வளா்மதி, மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி உதவிப்பேராசிரியா் தி.பரிமளா, பணி நிறைவு பெற்ற முதுகலை ஆசிரியா் மு.அழகுராஜ், தியாகராஜா் கல்லூரி உதவிப்பேராசிரியா் ந.தமிழ்மொழி, மதுரை திருக்கு மன்றத்தலைவா் க.ராஜேந்திரன் ஆகியோா் நூல் மதிப்புரையாற்றினா்.

இந்நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com