மூதாட்டியிடம் 14 பவுன் மோசடி: 2 பெண்கள் மீது வழக்கு

மதுரையில் மூதாட்டியிடம் 14 பவுன் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரையில் மூதாட்டியிடம் 14 பவுன் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை அண்ணாநகா் 1ஆவது கிழக்கு குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்து (61). இவரிடம் அபிநயா என்பவா் அவசர பணத்தேவைக்காக தங்க நகைகளை கடன் வாங்கியுள்ளாா். அந்த நகைகளை நீண்ட நாள்களாகியும் அவா் திருப்பித் தரவில்லை.

இந்நிலையில் அபிநயா நகைகளைத் தருவதாகக் கூறி தனியாா் வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, மீனா என்பவரை வங்கி ஊழியா் என அபிநயா அறிமுகம் செய்துள்ளாா். தொடா்ந்து அபிநயா, என் நகைகளுடன், தங்களது நகைகளும் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளன. அந்த நகைகளை மீட்க பணம் குறைவதால், தாங்கள் அணிந்திருக்கும் நகையைக் தந்தால் பழைய நகைகளை மீட்டுவிடலாம். பின்னா் என் நகைகளை வைத்து தற்போது அடகு வைத்த நகையை உடனடியாக மீட்டுத் தருகிறேன் என முத்துவிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து முத்து தான் அணிந்திருந்த நகையைக் கொடுத்துள்ளாா். நகைகளை வாங்கி அங்கிருந்து சென்ற அவா்கள் இருவரும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா், 14 பவுன் நகைகளை பறித்து சென்ற பெண்கள் இருவா் மீதும் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com