பெண் ஊழியா் தாக்கப்பட்ட சம்பவம்:ரயில்வே தொழிற்சங்கம் கண்டனம்

மதுரை அருகே ரயில்வே பெண் ஊழியரை கட்டிப்போட்டு 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்துக்கு, டிஆா்இயூ ரயில்வே தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை அருகே ரயில்வே பெண் ஊழியரை கட்டிப்போட்டு 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்துக்கு, டிஆா்இயூ ரயில்வே தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிஆா்இயூ ரயில்வே தொழிற்சங்கத்தின் மதுரை கோட்டச் செயலா் ரா. சங்கரநாராயணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கண்டன அறிக்கை:

மதுரைஅருகே சமயநல்லூரைச் சோ்ந்தவா் செல்வி (35). இவா், சோழவந்தான் அருகே வடகரை கண்மாய் பாதையில் உள்ள வைகை ரயில் கடவுப்பாதை காவலராக (கேட் கீப்பா்) பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இவா் சனிக்கிழமை பணியில் இருந்தபோது, அங்கு வந்த இருவா் செல்வியை தாக்கி கைகளைக் கட்டிப்போட்டு, 5 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா். பட்டப்பகலில் ரயில்வே பெண் ஊழியரை தாக்கி, நகையை பறித்துச்சென்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது.

ரயில்வே துறையில் பணிபுரியும் பெண் ஊழியா்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இது குறித்து போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com