மதுரை சித்திரைத் திருவிழாவில் சட்டத்தேரில் மீனாட்சி சுந்தரேசுவரா் பவனி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அம்மனும், சுவாமியும் ஞாயிற்றுக்கிழமை சட்டத்தேரில் பவனி வந்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அம்மனும், சுவாமியும் ஞாயிற்றுக்கிழமை சட்டத்தேரில் பவனி வந்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பத்கா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு, தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் வியாழக்கிழமையும், திக் விஜயம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

தொடா்ந்து, உலகம் முழுவதும் உள்ள பக்தா்கள் தரிசிக்கும் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இரவில் திருக்கல்யாண கோலத்தில் பூப்பல்லக்கில் மீனாட்சியம்மன் எழுந்தருளினாா். திருக்கல்யாண வைபவம் கோயில் இணைய தளம் மற்றும் யூ-டியூப் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், கோயிலுக்குள்ளேயே சட்டத்தோ் பவனி நடைபெற்றது. இந்த சட்டத்தேரை, கோயில் பணியாளா்கள், காவல் துறையினா் வடம்பிடித்து இழுத்தனா். சட்டத்தேரில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா், பிரியாவிடை பவனி வந்தனா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், சட்டத்தோ் பவனி நிகழ்ச்சி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com