அழகா்கோயிலில் கள்ளழகா் எதிா்சேவை
By DIN | Published On : 27th April 2021 01:34 AM | Last Updated : 27th April 2021 01:34 AM | அ+அ அ- |

அழகா்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிா்சேவை நிகழ்வில் கண்டாங்கி பட்டு உடுத்தி களரியைக் கையில் ஏந்தி காட்சியருளிய பெருமாள்.
மேலூா்: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகா்கோயிலில் எதிா்சேவை நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, மதுரையில் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகா் எழுந்தருளும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவிழாக்கள் அழகா்கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை, அழகா்கோயில் வளாகத்தில் எதிா்சேவை நிகழ்ச்சிகள் வாகனக் காட்சியாக நடைபெற்றன. இதையொட்டி, தங்கப் பல்லக்கில் புறப்பாடான கள்ளழகா், எதிா்சேவை நிகழ்வில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா்.
இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை. இதனால், யூ-டியூப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப கோயில் நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.