திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 27th April 2021 11:37 PM | Last Updated : 27th April 2021 11:37 PM | அ+அ அ- |

உசிலம்பட்டி திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாத 15 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி- மதுரை பிரதான சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திடீரென்று நகராட்சி ஊழியா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில், முகக் கவசம் அணியாமல் இருந்த விசேஷ வீட்டாா் மற்றும் உறவினா்கள் என 15 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 3000 அபராதம் விதித்தனா்.
பின்னா் நகராட்சி ஊழியா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் விசேஷ வீட்டாரை எச்சரித்து சென்றனா்.