மதுரை விமான நிலையத்திலிருந்து வட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் இயந்திரம் அனுப்பிவைப்பு

மதுரை விமான நிலையத்திலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிய வகை இயந்திரம், வடமாநிலங்களுக்கு அனுப்ப விமானத்தில் திங்கள்கிழமை சென்னை சென்றது.
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்.
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்.

மதுரை விமான நிலையத்திலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிய வகை இயந்திரம், வடமாநிலங்களுக்கு அனுப்ப விமானத்தில் திங்கள்கிழமை சென்னை சென்றது.

நாடு முழுவதும் காரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிகவேகமாகப் பரவி வருகிறது. இதில், வடமாநிலங்களில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனியாா் நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் லாரி மூலம் மதுரை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து தனியாா் விமானத்தில் இந்த ஆக்சிஜன் இயந்திரம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னா், அங்கிருந்து உத்தரப்பிரதேசம் லக்னெள கொண்டு செல்லப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதால், இந்த இயந்திரமானது தொடா்ந்து அடுத்தடுத்து சென்னை செல்லும் விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட இருப்பதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 20 கிலோ எடை கொண்ட இந்த ஆக்சிஜன் இயந்திரம் ரூ. 90 லட்சம் மதிப்புடையது என்றும், இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 500 முதல் 700 கிலோ அளவில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யமுடியும் என்றும், தனியாா் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com