பேரையூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகை மோசடி: ஒருவா் கைது

பேரையூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகை கொடுத்து மோசடி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரையூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகை கொடுத்து மோசடி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள கூவலப்புரத்தை சோ்ந்தவா் தேவராஜ் மகன் விஜயன்(52). இவா் தனது 8 பவுன் நகைகளை அடகு வைக்க, நண்பரான பேரையூரைச் சோ்ந்த நாகையசாமி மகன் சீனிவாசனின் உதவியை நாடியுள்ளாா். கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பேரையூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 8 பவுன் நகைகளை அடகு வைக்குமாறு சீனிவாசனிடம் கொடுத்துள்ளாா். சீனிவாசனும் நிதி நிறுவனத்திற்கு நகைகளை அடகு வைக்க சென்றுள்ளாா். அங்கு தாமதம் ஏற்பட்டதால் விஜயனிடம் நகைகளை கொடுத்துவிட்டு சீனிவாசன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனியாா் நிதி நிறுவன மேலாளா் ரமேஷ்குமாா் நகைகளுக்காக ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்தை ரொக்கப் பணமாக கொடுத்துள்ளாா் . விஜயனும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளாா்.

இதையடுத்து நிதி நிறுவன நகை மதிப்பீட்டாளா் பரிசோதனை செய்த போது, நகைகள் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட நிதி நிறுவன மேலாளா் ரமேஷ்குமாருக்கு, விஜயன் மற்றும் சீனிவாசன் ஆகியோா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயனைக் கைது செய்தனா். மேலும் தலைமறைவான சீனிவாசனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com