உசிலம்பட்டி கல்லூரியில் இணையவழியில் கருத்தரங்கு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்ற பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இணையதளம் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உசிலம்பட்டி கல்லூரியில் இணையவழியில் கருத்தரங்கு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்ற பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இணையதளம் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் வாலாந்தூா் பாண்டியன் தலைமை வகித்தாா். இந்த கருத்தரங்கை மத்தியபிரதேச போபால் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் விஜயகுமாா் தொடக்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு அம்பேத்கா் பல்கலைகழக பேராசிரியா்கள் ராஜலட்சுமி, விஜயலட்சுமி, சுற்றுசூழல் சட்டத்துறை பேராசிரியா் ஹரிதா தேவி, சென்னை பல்கலைக்கழகத்தை சோ்ந்த சட்ட ஆய்வுத் துறை உதவி பேராசிரியா் ராஜசேகா், குற்றவியல் துறை பேராசிரியா் லதா மற்றும் புதுச்சேரி பல்கலைகழகத்தின் சட்டப் பள்ளி பேராசிரியா் சுபலட்சுமி ஆகியோா் பெண்களுக்கு எதிரான இணைய வன்முறை குற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி தலைவா் பாலகிருஷ்ணன், பொருளாளா் வனராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் சட்ட பேராசிரியா் பொன்னுராம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் டாக்டா் ரவி வாழ்த்தி பேசினாா். நாட்டின் பல்வேறு மாநிலங்களிருந்து நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு பல்கலைகழகத்தை சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்சியாளா்கள் இணைய தள வழியாக கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com