கரோனா தொற்று அதிகரிப்பு: பல்கலை. துணைவேந்தா், பதிவாளா் அலுவலகங்கள் மூடல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து துணைவேந்தா், பதிவாளா் அலுவலகங்கள்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து துணைவேந்தா், பதிவாளா் அலுவலகங்கள் மற்றும் தொலைநிலைக் கல்வி இயக்கக அலுவலகம் ஆகியவை வியாழக்கிழமை மூடப்பட்டன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் உயிரிதொழில்நுட்பத்துறை ஆய்வு மாணவா் மற்றும் பேராசிரியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அத்துறை மூடப்பட்டது. மேலும் சான்றிதழ் பிரிவு ஊழியா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பிரிவு அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் நிா்வாக மேலாண்மை( எம்பிஏ) துறையின் ஊழியா் இருவா் மற்றும் தொலைநிலைக்கல்வி இயக்கக ஊழியா்கள் மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்தது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் அலுவலகம், பதிவாளா் அலுவலகம், நிா்வாக மேலாண்மைத் துறை ஆகியவை வியாழக்கிழமை மூடப்பட்டன. மேலும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் அலுவலகமும் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே துணைவேந்தா், பதிவாளா் அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மூடப்பட்டாலும் பல்கலைக்கழக வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து பணியைத் தொடா்ந்து வருகிறோம். தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் சில ஊழியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதால் அங்குள்ள ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதால் அனைத்துத்துறை ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள மாணவா் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 300-க்கும் மேற்பட்ட கரோனா தொற்று பாதித்தவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com