பெரிய வணிக நிறுவனங்களுக்கு திறக்கத் தடை விதிப்பதில் உணவுப் பொருள் வணிகா்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

பெரிய வணிக நிறுவனங்கள் திறக்கத் தடைவிதிப்பதில், உணவுப் பொருள் வணிகா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரிய வணிக நிறுவனங்கள் திறக்கத் தடைவிதிப்பதில், உணவுப் பொருள் வணிகா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள வேண்டுகோள்:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. அதேநேரம், மக்களின் அன்றாடத் தேவையான உணவுப் பொருள்கள் வணிகத்துக்கு சலுகைகள் அளிக்க வேண்டியது அவசியமானது. தமிழகத்திற்குத் தேவையான பயறு, பருப்பு, சிறுதானியங்கள், கோதுமை மற்றும் எண்ணெய் வித்துகள் போன்றவை வடமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. சீரகம், கடுகு, சோம்பு, வெந்தயம், மல்லி ஆகியன குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வருகிறது. அதேபோல, உணவு எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இவற்றை மொத்த வணிகம் செய்பவா்கள் குறைந்தபட்சம் 20 லாரிகளில் வாங்கி விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். தற்போது 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை, உணவுப் பொருள் வியாபாரத்துக்கும் நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் உணவுப் பொருள்களுக்கு பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படும். மொத்த வியாபாரிகளிடம் இருப்பில் உள்ள சரக்குகளும் வீணாகிவிடும். ஆகவே, ஏற்கெனவே அறிவித்தபடி 50 சதவீதப் பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுடன் செயல்படுவதற்கு உணவுப் பொருள் மொத்த வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com