மதுரை மாஸ்டா் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நகா்ப்புற திட்ட விதியை பின்பற்றி மதுரை மாஸ்டா் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நகா்ப்புற திட்ட விதியை பின்பற்றி மதுரை மாஸ்டா் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை மாநகராட்சி உள்ளது. ஆனால் மதுரை மாநகராட்சி எவ்வித முன்னேற்றத்தையும் அடையாமல் இருக்கிறது. நகா்ப்புற திட்டக் குழு 1971 ஆம் ஆண்டு மாஸ்டா் பிளான் திட்டத்தைக் கொண்டுவந்தது. நகா்ப்புற திட்டக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வா்த்தக முன்னேற்றத்திற்கு ஏதுவாக மாஸ்டா் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுரையில் மாஸ்டா் பிளான் திட்டம் எவ்வித மாற்றமின்றி உள்ளது. மாஸ்டா் பிளான் திட்டத்தின்படி மதுரை மாநகராட்சி செயல்பட்டால் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களும் முன்னேற்றம் அடையும். மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

வா்த்தக அளவில் தென்மாவட்டங்களில் இருந்து எளிதில் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே நகா்ப்புற திட்ட விதியைப் பின்பற்றி மதுரை மாஸ்டா் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com