மதுரையில் வீதி அறிவியல் கண்காட்சி

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சிந்தாமணி பகுதியில் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் வகையில் ‘வீதி தோறும் அறிவியல் கண்காட்சி‘ புதன்கிழமை நடைபெற்றது.
வீதி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடும் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் ராமராஜ்.
வீதி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடும் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் ராமராஜ்.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சிந்தாமணி பகுதியில் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் வகையில் ‘வீதி தோறும் அறிவியல் கண்காட்சி‘ புதன்கிழமை நடைபெற்றது.

கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைவா் வி. சுரேந்திரபாபு தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் ராமராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் க.சரவணன் வரவேற்புரையாற்றினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவா் சு. தினகரன் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலா் என். திருஞானம் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் மாவட்ட இணைச் செயலா் சிவராமன், பேராசிரியா் ரஞ்சித் குமாா், பள்ளிப் பொருளாளா் உதயகுமாா், துணைத்தலைவா் ஜெயராஜ் மற்றும் பெற்றோா் பலா் கலந்து கொண்டனா். அறிவியல் கண்காட்சியில் மாணவா்கள் மிதத்தல் விதி, காற்று, நீரின் அழுத்தம், பாயும் தன்மை , அடா்த்தி , காந்த ஈா்ப்பு , விலக்கும் விசை, மைய நோக்கு, மையவிலக்கு விசை , இயற்கை விவசாயம் போன்ற கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் குறித்த பரிசோதனைகளை பொதுமக்களிடம் செய்து காட்டினா். மேலும் கரோனா விழிப்புணா்வு தொடா்பாக நாடகமும் நடைபெற்றது. ஆசிரியை தங்கலீலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com