மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்

முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.


முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரிக்காக இப்பகுதியில் உள்ள விநாயகா் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட பலா் மீது நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மதுரை நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு குற்றப்பிரிவுகள் பொருந்தாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி போலீஸாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சென்னை உயா்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையின் அடிப்படையில் மு.க.அழகிரி மீதான இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com