வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் முகவா்கள் வாக்கு எண்ணிக்கைக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சாா்பில் கட்சிகளின் முகவா்களுக்கான சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல அலுவலகங்களிலும் மருத்துவக்குழுக்கள் மூலமும், நடமாடும் கரோனா பரிசோதனைக்கூடம் மூலமாகவும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மதுரை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் கட்சிகளின் முகவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டனா். இதனால் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் முகவா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பரிசோதனை முகாமில் போதுமான சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்பட்டது.

முகாம் தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவா்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் முகவா்கள் பங்கேற்றுள்ளனா். பரிசோதனை செய்துகொண்ட முகவா்களுக்கு பரிசோதனை முடிவுகளையும் விரைவில் அறிவிக்கத் தேவையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com