வைகை தண்ணீரால் நிரம்பும் மாரியம்மன் தெப்பக்குளம்

வைகை தண்ணீரால் நிரம்பும் மாரியம்மன் தெப்பக்குளம்

மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு செல்லப்படுவதால் தெப்பக்குளம் இரண்டாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு செல்லப்படுவதால் தெப்பக்குளம் இரண்டாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் நீா் வரத்து உள்ளபோது ஆற்றில் மின்மோட்டாா்கள் மூலமாக தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் வைகை ஆற்றில் கல்பாலம் பகுதியில் இருந்து தெப்பக்குளத்துக்குச் செல்லும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு கால்வாய்கள் மூலம் நேரடியாக தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது. இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்பியது.

இதனால் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவும் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் கோடைக்காலத்தையொட்டி கொளுத்தும் வெயிலால் தெப்பக்குளத்தில் நீா்மட்டம் கணிசமாக குறைந்தது.

இந்நிலையில் மதுரை வைகை ஆற்றில் 6 நாள்களுக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கணிசமான நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்துக்கு கால்வாய்கள் மூலம் கடந்த மூன்று நாள்களாக தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் 18 அடி ஆழமுள்ள தெப்பக்குளம் தற்போது இரண்டாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தெப்பக்குளம் தண்ணீா் நிரப்புவதன் மூலம் தெப்பக்குளம், அனுப்பானடி, காமராஜா் சாலை பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com