மதுரை ரயில் பயணிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை

மதுரை ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மூலம் ரயில்களில் வரும் பயணிகளை கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து அனுப்பிய சுகாதாரத் துறையினா்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: கரோனா தொற்று பரவலைத் தடுக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களில் வருபவா்களை சோதனை செய்வதன் மூலம் நோய் தொற்று பரவலை தடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி. ஆா். லெனின் உத்தரவின் பேரில் மதுரை கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் வி. பிரசன்னா மதுரை கோட்ட எல்கைக்கு உள்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் ஆலோசனை நடத்தி மாநில சுகாதார அதிகாரிகளை ரயில் நிலையங்களில் பயணிகளை சோதிக்க பணியமா்த்த வேண்டுகோள் விடுத்தாா்.

அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ரயில்களில் வரும் பயணிகளை கரோனா தொற்று பரிசோதனை செய்து நகருக்குள் அனுமதித்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com