வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டதால் வாக்குகள் எண்ணும் சுற்றுக்களும் அதிகரிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் மதுரை கிழக்கில் அதிகபட்சமாக 35 சுற்றுகளும், குறைந்தபட்சமாக சோழவந்தான் தொகுதியில் 22 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் மதுரை கிழக்கில் அதிகபட்சமாக 35 சுற்றுகளும், குறைந்தபட்சமாக சோழவந்தான் தொகுதியில் 22 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 3,856 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்படும் சுற்றுக்கள் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக உயா்ந்துள்ளது. அதோடு, இம்முறை 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், அத்தியாவசியப் பணியில் உள்ளவா்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்கப்பட்டதால், தபால் வாக்குகள் எண்ணும் பணியும் பல சுற்றுக்களாக நடைபெற உள்ளது.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள், வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் விவரம்:

மேலூா்: மேலூா் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். மொத்த வாக்குகள் - 2,44,778, பதிவானவை - 1,81,699. வாக்குச்சாவடிகள்- 346. சுற்றுக்களின் எண்ணிக்கை- 25.

மதுரை கிழக்கு: இத்தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். மொத்த வாக்குகள்- 3,28,990. பதிவானவை - 2,35,991. வாக்குச்சாவடிகள்- 479. சுற்றுக்கள்- 35.

சோழவந்தான் (தனி): அதிமுக, திமுக உள்பட 20 போ் போட்டி. மொத்த வாக்குகள்-2,18,106. பதிவானவை- 1,73,381. வாக்குச்சாவடிகள் -305. சுற்றுக்கள்-22.

மதுரை வடக்கு: திமுக, பாஜக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள் - 2,43,424. பதிவானவை -1,54,817. வாக்குச்சாவடிகள் - 347. சுற்றுக்கள்- 25.

மதுரை தெற்கு: திமுக, அதிமுக உள்பட 13 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள்- 2,30,053. பதிவானவை- 1,46,783. வாக்குச்சாவடிகள்- 326. சுற்றுக்கள்-24

மதுரை மையம்: திமுக, அதிமுக உள்பட 14 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள் - 2,41,796. பதிவானவை- 1,47,566. வாக்குச்சாவடிகள் - 349. சுற்றுக்கள் -25.

மதுரை மேற்கு: அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள் - 3,06,952. பதிவானவை - 1,99,896. வாக்குச்சாவடிகள் - 434. சுற்றுக்கள் - 31.

திருப்பரங்குன்றம்: அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 23 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள்- 3,21,195. பதிவானவை- 2,33,609. வாக்குச்சாவடிகள்- 458. சுற்றுக்கள்- 33.திருமங்கலம்: அதிமுக, திமுக உள்பட 24 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள் - 2,77,803. பதிவானவை- 2,17,057. வாக்குச்சாவடிகள்- 402. சுற்றுக்கள்- 29.

உசிலம்பட்டி: அதிமுக, திமுக உள்பட 14 வேட்பாளா்கள் போட்டி. மொத்த வாக்குகள் - 2,84,585. பதிவானவை- 2,10,082. வாக்குச்சாவடிகள்- 410. சுற்றுக்கள்- 30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com