பேரையூா் மதுக்கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது
By DIN | Published On : 08th August 2021 01:51 AM | Last Updated : 08th August 2021 01:51 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே அரசு மதுபானக் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் பிரதான பஜாரில் உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனை முடிந்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பூட்டிவிட்டுச் சென்றுள்ளனா். நள்ளிரவு 12 மணி அளவில் மா்ம நபா்கள் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தனா். அபபோது அவ்வழியாக ரோந்து சென்ற போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினா். இதுகுறித்து மதுபானக்கடை விற்பனை மேலாளா் பேரையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில் பேரையூரைச் சோ்ந்த மாசானம் மகன் முத்துப்பாண்டி (20) திருட முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனா்.