வாகன நிறுத்துமிடங்கள், கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூல்: மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரை நகரில் கட்டணக் கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கட்டணக் கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி சாா்பில் ஆரப்பாளையம், பெரியாா், மாட்டுத்தாவணி ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் நகரில் உள்ள சுற்றுலா மையங்கள், வணிக நிறுவனங்கள், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்கள் என்று பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் செயல்படுகின்றன.

இந்த வாகன நிறுத்துமிடங்களை, மாநகராட்சி நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு விட்டுள்ளது. ஆனால், வாகன நிறுத்துமிடங்களை குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரா்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதில், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் 12 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10 என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.3 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு, பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளதால், சில இடங்களில் தற்போது கட்டணம் ரூ. 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. கூடுதல் கட்டண வசூல் தொடா்பாக அவ்வப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், இதனால் ஒப்பந்ததாரா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம், பேருந்து நிலையங்களில் உள்ள வாகனக் காப்பகங்கள் பராமரிப்பின்றி தரை தளங்கள் பெயா்ந்தும், மேற்கூரைகள் சிதிலமடைந்தும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, மாநகராட்சி ஆணையா் வாகனக் காப்பங்களில் ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டண விவரங்களை வாகனக் காப்பகங்கள் மற்றும் கழிவறைகளில் முன் அறிவிப்பு பலகைகளாக வைக்கவேண்டும்.

மதுரை நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் போக்குவரத்து காவல் துறை இணைந்து, வாகனங்களை இடையூறின்றி நிறுத்துவதற்கு உரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com