ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
By DIN | Published On : 08th August 2021 01:49 AM | Last Updated : 08th August 2021 01:49 AM | அ+அ அ- |

கீா்த்திலால் நிறுவனம் சாா்பில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய நிறுவன துணைத் தலைவா் முத்துக்குமாா்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கீா்த்திலால் தங்க, வைர நகைகள் விற்பனை நிறுவனம் மற்றும் அதன் ஊழியா்கள் சாா்பில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நோயாளிகளுக்கான கட்டில், கரோனா தடுப்பு கருவிகள், நோய் எதிா்ப்பு சக்தி ஊட்டச்சத்து பொருள்கள்
ஆகியவற்றை கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் உதய ராஜபிரியா, வட்டார மருத்துவ அலுவலா் லாவண்யா செல்லம் ஆகியோரிடம் கீா்த்திலால் நிறுவனத்தின் துணைத் தலைவா் முத்துக்குமாா் வழங்கினாா். அந்நிறுவனத்தின் மதுரைக் கிளை மேலாளா் சரவணன், வா்த்தக மேலாளா் விக்னேஷ் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.