கருப்பு பூஞ்சை: மதுரையில் 331 போ் குணமடைந்தனா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 365 நோயாளிகளில் 331 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 365 நோயாளிகளில் 331 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலு செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பரவத் தொடங்கிதும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இங்கு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சோ்ந்த கருப்புப் பூஞ்சை நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு காது, மூக்கு, தொண்டைப் பிரிவு, கண், பொது மருத்துவம், நீரிழிவு உள்ளிட்ட 6 துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்தனா். ஜூலை 31 ஆம் தேதி வரை கருப்புப் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்ட 365 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 331 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா்.

கரோனாவில் குணமடைந்தவா்களுக்கு பாதிப்பு அதிகம்: கரோனாவில் இருந்து குணமடைந்த பெரும்பாலானோருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 354 போ் நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்கள். கரோனா முதல் அலையில் இந்நோய் தொற்றால் 2 போ் மட்டுமே பாதிக்கப்பட்டனா்.

உயிரிழப்பில்லை. கருப்புப் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை, கண் குறைபாடுகளைக் குறைக்க கண்வழி ஆம்போடெரிசின் ஊசி மருந்து, பொசகொனசோல் மாத்திரை உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டன. இதனால், நோயாளிகளுக்கு ஏற்பட்ட கருப்புப் பூஞ்சை தாக்கம் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, அவா்கள் விரைவாக குணமடைய உதவியது.

ராஜாஜி மருத்துவமனையை பொருத்தவரை கருப்புப் பூஞ்சை தொற்று சிகிச்சைப் பெற்றவா்களில் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்றாா்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவத் துறைத் தலைவா் தினகரன், கண் மருத்துவத் துறை தலைவா் விஜய், பொது மருத்துவத் துறைத் தலைவா் நடராஜன், நிரழிவு மருத்துவத் துறைத் தலைவா் சுப்பையா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com