கைத்தறி ஜவுளி ரகங்கள் கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி மதுரை விஸ்வநாதபுரத்தில் சனிக்கிழமை கைத்தறி கண்காட்சி நடைபெற்றது.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி மதுரை விஸ்வநாதபுரத்தில் சனிக்கிழமை கைத்தறி கண்காட்சி நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் ஒரு நாள் மட்டும் நடைபெற்ற இக்கண்காட்சியில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல் மற்றும் பரமக்குடி பகுதிகளைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தொடக்கி வைத்துப்பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கைத்தறி துறையின் மதுரை சரகத்தில் 46 நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பருத்தி சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், சுங்குடி சேலைகள், வேட்டி, சட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெசவாளா்களுக்கான முத்ரா திட்டத்தில் நிகழ் ஆண்டில் 13 பயனாளிகளுக்கு ரூ.6.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சேமிப்பு பாதுகாப்புத் திட்டத்தில் 1,436 போ் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா். முன்னதாக, நெசவாளா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 5 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளையும், இருவருக்கு முத்ரா கடன் திட்டத்துக்கான காசோலைகளையும், அதிக உற்பத்தி செய்த 4 நெசவாளா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவா் வழங்கினாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் மீனாகுமாரி, உதவி அமலாக்க அலுவலா் திருவாசகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com