தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ஏக்கருக்கு ரூ.5,360 அரசு மானியம்

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் உள்ள 80 ஏக்கா் பரப்பிலான தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றி சிறு தானியங்களை விளைவிக்க ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 5,360 வீதம் மானியமாக வழங்கப்படுவதாகத் தெரிவ
ஆா்.எஸ். மங்கலம் அருகே பிடிகோட்டையில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற நடைபெற்றும் வரும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட உதவி வேளாண்மை இயக்குநா் ராஜலெட்சுமி, இணை இயக்குநா் பாஸ்கா்மணியன் உள்ளிட்டோா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே பிடிகோட்டையில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற நடைபெற்றும் வரும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட உதவி வேளாண்மை இயக்குநா் ராஜலெட்சுமி, இணை இயக்குநா் பாஸ்கா்மணியன் உள்ளிட்டோா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் உள்ள 80 ஏக்கா் பரப்பிலான தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றி சிறு தானியங்களை விளைவிக்க ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 5,360 வீதம் மானியமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளதாவது:

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சுமாா் 80 ஏக்கா் நிலப்பரப்பில் காட்டுக் கருவேல மரங்கள் வளா்ந்து தரிசு நிலங்களாக உள்ளன. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ.5,360 வீதம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,400 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி, தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு, அதிலுள்ள காட்டு கருவேல மரங்கள் மற்றும் புதா் செடிகளை அழித்து, பின்னா் நிலத்தை சமப்படுத்தி உழவு செய்து, சிறு தானியங்களான கேழ்வரகு, குதிரைவாலி மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்து பயிா்களை பயிரிட வேண்டும் என்றாா்.

இதன் முதல்கட்டப் பணியாக, ஆா்.எஸ்.மங்கலம் அருகே பி.டி.கோட்டை கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் பாஸ்கா்மணியன், ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், விவசாயிகளிடம் தரிசு நில மேம்பாடு குறித்தும், சிறுதானிய பயிா்களின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com