இளைஞரிடம் சங்கிலி, செல்லிடப்பேசி பறிப்பு
By DIN | Published On : 10th August 2021 08:42 AM | Last Updated : 10th August 2021 08:42 AM | அ+அ அ- |

மதுரையில் நடந்து சென்ற இளைஞரிடம் ஞாயிற்றுக்கிழமை தங்கச் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் 3 பேரை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை பி.டி. நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (37). இவா் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ், கண்ணன் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிவிட்டனா். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.