நேரில் ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கத் துறைக்கு அமைச்சா் கடிதம்

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரி தமிழக மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கடிதம் அளித்துள்ளாா்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரி தமிழக மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கடிதம் அளித்துள்ளாா்.

அதிமுக ஆட்சியின்போது 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக மத்திய அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு மதுரையில் உள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து அமைச்சா் செந்தில்பாலாஜி, விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், அவா் ஒரு மாதம் அவகாசம் கோரி கடிதம் அளித்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com