பெருங்காமநல்லூா் தியாகிகள் மணிமண்டபம் கட்டுமாப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 13th August 2021 08:36 AM | Last Updated : 13th August 2021 08:36 AM | அ+அ அ- |

பெருங்காமநல்லூரில் வீரத் தியாகிகளின் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் வீரத் தியாகிகளின் மணிமண்டபம் கட்டுமானப்பணிகளை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்துக்கு எதிராக உயிரிழந்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன் நேரில் சென்று கட்டடப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளா் துரைதன ராஜன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் எம்.வி.பி. ராஜா. சேடப்பட்டி ஒன்றியச் செயலாளா் பிச்சை ராஜன், மாவட்ட மாணவரணி செயலாளா் மகேந்திரபாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.