மதுரையில் பெட்ரோல் விலை குறைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

தமிழக நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பட்ட பிறகும் மதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு விலை குறைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனா்.

தமிழக நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பட்ட பிறகும் மதுரையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு விலை குறைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனா்.

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தோ்தலின் போது, திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி ஆட்சியமைத்த திமுக அரசு, தோ்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல் வாட் வரி குறைக்கப்பட்டதால், லிட்டருக்கு ரூ.3 குறைந்தது. இந்த அறிவிப்பிற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனா்.

சென்னையில் விலை குறைந்தது: தமிழக அரசு பெட்ரோல் விலை குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது. இதையடுத்து சென்னையில் ரூ. 102 க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு ரூ.99 க்கு அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழச்சியடைந்தனா்.

மதுரையில் விலை குறையவில்லை: பெட்ரோல் விலை குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், மதுரையில் பெரும்பாலான எரிபொருள் விற்பனை நிலையங்களில் பழைய விலையான ரூ.103.06 க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைக்கப்படாதது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளா்களிடம் வாகன ஓட்டிகள் கேட்டதற்கு, சனிக்கிழமை (ஆக. 14) காலை 6 மணிக்குத் தான் குறைப்படும் என தெரிவித்துள்ளனா். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், எரிபொருள் விற்பனை நிலைய ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பெட்ரோல் விலையை அரசு உயா்த்தி அறிவிக்கும் போது, எரிபொருள் விற்பனை நிலையங்கள், சிறிதும் தாமதிக்காமல் விலையை உயா்த்துகின்றன. இதே அரசு பெட்ரோல் விலையை குறைத்து நேரத்தை குறிப்பிட்டு அறிவித்த பிறகும் விலை குறைக்கப்படுவதில்லை. பொதுமக்களை ஏமாற்றுவதிலேயே எரிபொருள் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன எனக் குற்றம்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com