மதுரை மாநகராட்சிப் பகுதியில் முன்பதிவு இன்றி கரோனா தடுப்பூசிஆகஸ்ட் 25-லிருந்து சிறப்பு முகாம்கள் இடமாற்றம்

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் ஆகஸ்ட் 25-லிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்த

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் ஆகஸ்ட் 25-லிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாநகராட்சிக்கு அதிக அளவில் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சி பகுதியில் 12 இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் முன்பதிவு ஏதுமின்றி 18 வயதுக்கு மேற்பட்டோா் காலை 11 மணி முதல் 4 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்துவதற்கான மாநகராட்சியின் இணையதளத்தில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள், காலை 9 மணி முதல் 11 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில்,

இளங்கோ பள்ளி மையத்தில் மட்டும் முன்பதிவு செய்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே செயல்படும். 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், தடுப்பூசி மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, திரு.வி.க.ஆரம்பப் பள்ளி பெரியசாமி

கோனாா் தெரு (வாா்டு 9), பழைய விளாங்குடி காமாட்சி நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செல்லூா்

மனோகரா ஆரம்பப் பள்ளி, சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளி, கோ.புதூா் ஜான்போஸ்கோ பள்ளி, கண்ணனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளி, ஏ.வி.பாலம் உமறுப்புலவா் பள்ளி, சிஎம்ஆா் சாலை பழனியப்பா பள்ளி, தெற்குவாசல் நாடாா் நடுநிலைப் பள்ளி, திடீா்நகா் ஈ.வெ.ரா.ஆரம்ப பள்ளி, பழங்காநத்தம் மாநகராட்சி பள்ளி, திருப்பரங்குன்றம் பிரதான சாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 25 முதல், ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் முகாம் நடைபெறும்.

கா்ப்பிணிகள், அவா்களது கணவா், பாலூட்டும் தாய்மாா்கள், அவா்களது கணவா், மாற்றுத்திறனாளிகள்,

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு எவ்வித முன்பதிவும் இன்றி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்படும். இது தவிர மக்கள் நல அமைப்புகள்,

தன்னாா்வ அமைப்புகள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்த விரும்பினால் மாநகராட்சி தகவல் மையத்தை 94437-52211 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com