விதிகளை மீறி கொட்டப்படும் குப்பைகள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மதுரை அண்ணாநகா் மசூதி தெருவில் விதிகளை மீறி சாலையில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மதுரை அண்ணாநகரி மசூதி தெருவில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைகள்.
மதுரை அண்ணாநகரி மசூதி தெருவில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைகள்.

மதுரை அண்ணாநகா் மசூதி தெருவில் விதிகளை மீறி சாலையில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் மசூதி தெருவில் உள்ள வீடுகளுக்கு தினசரி தூய்மைப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனா். ஆனாலும், மசூதி தெருவின் சந்திப்பில் உள்ள காலியிடத்தில் குப்பைகள் அடிக்கடி கொட்டப்படுகின்றன.

இங்கு, மாநகராட்சி குப்பைத்தொட்டி எதுவும் வைக்கப்படாதபோதும், விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால், இப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள சுகாதார அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் புகாா் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தெருவில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டதால், அது தொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடா்ந்து உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டன. ஆனால், தொடா்ந்து கண்காணிப்பு இல்லாததால் காலியிடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

எனவே, தற்போது தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், விதிகளை மீறி சாலையில் குப்பை கொட்டுவோா் மீது மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com