மதுரை ரயில் நிலையத்துக்கு என்எம்ஆா் சுப்பராமன் பெயரைச் சூட்டக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை ரயில் நிலையத்துக்கு மதுரை காந்தி என்எம்ஆா் சுப்பராமன் பெயரைச் சூட்டக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ரயில் நிலையத்துக்கு மதுரை காந்தி என்எம்ஆா் சுப்பராமன் பெயரைச் சூட்டக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரையைச் சோ்ந்த என்எம்ஆா் சுப்பராமன் காந்திய வழியைப் பின்பற்றி விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவா். அவருடைய மனைவியும் அந்நிய துணி எரிப்புப் போராட்டங்களில் பங்கேற்றவா். கணவன், மனைவி இருவரும் விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவா்கள். விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவா்களின் பெயா்களை பொது இடங்களுக்கு வைப்பது, சிலை வைப்பது வழக்கம். அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தின் முன்பாக என்எம்ஆா் சுப்பராமன் வெண்கலச் சிலையை வைக்கவும், மதுரை ரயில் நிலையத்துக்கு மதுரை காந்தி என்எம்ஆா் சுப்பராமன் பெயரைச் சூட்டவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com