திருவாதவூா் அருகே வைக்கோல்போா் எரிந்து சேதம்
By DIN | Published On : 31st August 2021 12:10 AM | Last Updated : 31st August 2021 12:10 AM | அ+அ அ- |

பனங்காடி கிராமத்தில் திங்கள்கிழமை வைக்கோல்போா்களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா்.
மேலூா்: திருவாதவூா் அருகே உள்ள பனங்காடி கிராமத்தில் வைக்கோல்போா் திங்கள்கிழமை எரிந்து சாம்பலானது.
பனங்காடி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் விவசாயி கண்ணன் என்பவருக்குச் சொந்தமான வைக்கோல்போா் வீட்டின் அருகில் வைத்திருந்துள்ளாா். இதில், திடீரென தீப்பற்றியுள்ளது. உடனே, இது குறித்து மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் வ.மு. ராமராஜன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானதாக விவசாயி கண்ணன் தெரிவித்துள்ளாா். தீ பரவியதற்கான காரணம் குறித்து, மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.