பாதுகாப்பு கோரி வழக்குரைஞா் மனுதாக்கல்: உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சோ்ந்த வழக்குரைஞா் ரத்தினம் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்படும் ஆதிதிராவிட சமூக மக்களுக்காகவும், மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு

முக்கியமான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை கிடைப்பதற்கு காரணமாக இருந்துள்ளேன். இந்த வழக்குகளால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் என் மீது கடும் கோபமடைந்தனா். அக்கட்சியின் பொதுச் செயலா் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச் செயலா் வன்னியரசு ஆகியோருக்கு எதிராகப் புகாா்களை தெரிவித்திருந்தேன். இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் என்னைத் தொடா்ந்து மிரட்டியும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியும் வருகின்றனா். ஆகவே, எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அளிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தேன். ஆனால் எனக்கு கொலை மிரட்டல் இல்லை என்று கூறி பாதுகாப்பு வழங்க டிஜிபி மறுத்துவிட்டாா்.

கொலை மிரட்டல்கள் தொடா்ந்து வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு வழங்கவும், துப்பாக்கி உரிமம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com