ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தளபதி உயிரிழப்பு: காந்தி அருங்காட்சியகத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 போ் குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் பாரதி யுவகேந்திரா அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்தி அருங்காட்சியகத்தின் துணைத் தலைவா் ஜவகா் பாபு தலைமை வகித்தாா்.

செயலா் நந்தாராவ், பாரதி யுவகேந்திரா நிறுவனா் நெல்லை பாலு, ரோட்டரி சங்கம் ஈஷா கரீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சா்வ சமயப் பாடல்கள் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தலைமை தளபதி விபின் ராவத் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காந்தி அருங்காட்சியக கல்வி அலுவலா் நடராஜன், காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் தேவதாஸ், ஆசிரியா் ஜான் ஃபெலிக்ஸ், அருங்காட்சியக புகைப்பட கண்காணிப்பாளா் சப்ரா பீவி, தேசிய வலிமை இதழ் ஆசிரியா் நேதாஜி சுவாமிநாதன், சௌராஷ்டிர மத்திய சபை முன்னாள் செயலா் சாந்தாராம், பேராசிரியா் மகாதேவன், தமிழ்நாடு குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மைய மாநிலத் தலைவா் கா்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நடிகா் சங்கம் அஞ்சலி: இதேபோல தமிழ் சினிமா நடிகா் சங்கம் சாா்பில் மதுரை பொன்மேனி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச்செயலா் வினோத் தலைமையில் உறுப்பினா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவையின் அமைப்பாளா் ப.லெட்சுமணன் தலைமை வகித்தாா். இதில் அதிமுகவைத் சோ்ந்த கவிஞா் ப.மோகன்தாஸ், பாலகிருஷ்ணன், பாவேந்தா் இலக்கிய பேரவைச் செயலா் கவிஞா் ஜீவா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராஜாஜி, பாஜகவைச் சோ்ந்த வேல்முருகன், எம்.சேகா், இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த சோலைக்கண்ணன், அன்பழகன், இளங்கோ, பாரத மைந்தா்கள் பண்பாட்டுக்கழக அக்பா்அலி, தென்இந்திய பாா்வா்டு பிளாக் மாவட்ட இணைச் செயலா் குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று மாலை விபின்ராவத் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com