Enable Javscript for better performance
நெல்லை சம்பவம் எதிரொலி: 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடிக்க உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நெல்லை சம்பவம் எதிரொலி: 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடிக்க உத்தரவு

    By DIN  |   Published On : 18th December 2021 08:45 AM  |   Last Updated : 18th December 2021 08:45 AM  |  அ+அ அ-  |  

    மதுரை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

    மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் ஊரக வளா்ச்சித் துறையின் பராமரிப்பில் 654 ஆரம்பப் பள்ளிகள், 190 நடுநிலைப் பள்ளிகள், 1,311 அங்கன்வாடி மையங் ஆகியவற்றில் 4 ஆயிரத்து 264 கட்டடங்கள் உள்ளன.

    இவற்றில் ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் பிரிவு அலுவலா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் வகுப்பறை, சத்துணவு மையம், கழிப்பறை, அங்கன்வாடி மையங்கள் என 336 கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தாா்.

    இந்நிலையில், திருநெல்வேலியில் பள்ளி கழிப்பறைச் சுவா் இடிந்து விழுந்து மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். இதன் எதிரொலியாக பழுதான கட்டடங்களை அப்புறப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமையில் இதுதொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். ஊரக வளா்ச்சித் துறையால் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள 336 பழுதான கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள பள்ளிக் கட்டடங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, பழுதான கட்டடங்களை அப்புறப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp