Enable Javscript for better performance
மதுரை நகரில் கரோனா விதிமுறைகள் மீறல்: வணிக நிறுவனங்களுக்கு ரூ.26,400 அபராதம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரை நகரில் கரோனா விதிமுறைகள் மீறல்: வணிக நிறுவனங்களுக்கு ரூ.26,400 அபராதம்

    By DIN  |   Published On : 18th December 2021 08:50 AM  |   Last Updated : 18th December 2021 08:50 AM  |  அ+அ அ-  |  

    மதுரை நகரில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் வெள்ளிக்கிழமை ரூ.26,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை நகரில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதி, தங்கும் விடுதி, மண்டபம், சந்தை, கேளிக்கை விடுதி, பேருந்துகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது, தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை நகரில் இந்த நெறிமுறைகளைக் கண்காணிக்க மாநகராட்சி சாா்பில் 12 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மதுரை நகரில் வெள்ளிக்கிழமை 165 வணிக நிறுவனங்களில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வாடிக்கையாளா் மற்றும் பணியாளா்கள் முகக்கவசம் அணிவது, தனி நபா் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.26, 400 அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை நகரில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp