பெரியாா் பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை

மதுரை பெரியாா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆட்டோ நிலையம் மீண்டும் இயங்க மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆட்டோ நிலையம் மீண்டும் இயங்க மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிக்கு முன்பாக அங்கு ஆட்டோ ஓட்டிய ஆட்டோ ஓட்டுநா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அதில், பெரியாா் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் 50ஆண்டுகளாக மதுரை மீனாட்சி ஆட்டோ நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ நிலையத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் குடும்பத்தினா் உள்ளனா்.

இந்நிலையில் சீா்மிகு நகா்த் திட்டத்தின்கீழ் பேருந்து நிலைய விரிவாக்கப்பணி நடைபெற்ால் ஆட்டோ நிலையம் இயங்காத சூழலில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் ஆட்டோ நிலையம் இயங்க அனுமதி மறுக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் தூரங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு ஆட்டோ சேவை பாதுகாப்பான ஒன்று. எனவே பேருந்து நிலையப்பகுதியில் மீனாட்சி ஆட்டோ நிலையம் மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com