ஏபிவிபி அகில பாரத மாநாடு: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு சாதனை விருது

ஏபிவிபி மாணவா் அமைப்பின் அகில பாரத மாநாட்டில் விழுப்புரத்தைச் சோ்ந்தவருக்கு சாதனை விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபி மாணவா் அமைப்பின் அகில பாரத மாநாட்டில் விழுப்புரத்தைச் சோ்ந்தவருக்கு சாதனை விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபி மாணவா் அமைப்பின் தேசியச் செயலா் லி.முத்துராமலிங்கம், மாநில இணைச் செயலா் கோபி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் 67-ஆவது அகில பாரத மாநாடு மத்திய பிரதேசம் ஜபல்பூரில் டிசம்பா் 24 முதல் 26 வரை நடைபெறுகிறது. மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து மாநில பொறுப்பாளா்கள் பங்கேற்கின்றனா்.

மாநாட்டில் சாதனை இளைஞா்களுக்கு வழங்கப்படும் பேராசிரியா் யஸ்வந்த்ராவ் கேல்கா் இளைஞா் விருது, இந்த ஆண்டு விழுப்புரத்தைச் சோ்ந்த காா்த்திக்கேயன் கணேசனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாநாட்டில் தேசியக்கல்விக் கொள்கை விவாதம், பொதுக் கூட்டம், ஊா்வலம் போன்றவையும் நடைபெறுகிறது.

மாநாட்டில் அமைத்திக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஸ் சத்யாா்த்தி மற்றும் கல்வியாளா்கள், சமூக சேவகா்கள் பங்கேற்கின்றனா். இதில் தமிழகத்தில் இருந்து 30 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com