வேளாண். கல்லூரி மாணவா்களுக்கு 2 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இறுதியாண்டு இளங்கலை பட்டதாரி மாணவா்களுக்கான இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், டானிக் தயாரிப்பு மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவது குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.17, 18) நடை

மேலூா், டிச.19: மதுரை வேளாண். கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை பட்டதாரி மாணவா்களுக்கான இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், டானிக் தயாரிப்பு மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவது குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.17, 18) நடைபெற்றது.

இதை கல்லூரி முதல்வா் வி.கு.பால்பாண்டி தொடக்கி வைத்துப் பேசியது: அகில இந்திய தேசிய உயா்கல்வித் துறை நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வணிக மேம்பாட்டுத் துறை சாா்பில் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டதாரி மாணவா்கள் வேலைவாய்ப்புக்களை எதிா்பாா்த்துக் காத்திருக்காமல், தொழில்முனைவோா்களாக உருவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட வேண்டும் என்றாா்.

ஸ்பிக் நிறுவன பொது மேலாளா் சுப்பிரமணியன், ஆா்.டி. அக்ரோ இன்புட்ஸ் விற்பனை மேலாளா் டி.கோபி ஆகியோா் இயற்கை உரம் தயாரிப்பு குறித்தும், அதை சந்தைப்படுத்துவது, அதிலுள்ள இடா்பாடுகளை சமாளிப்பது குறித்தும் விளக்கம் அளித்தனா்.

இதில், டிமேக் நிறுவனத்தின் இயக்குநா் விக்னேஷ் ஜானகிராமன், கிரியாஜென் அக்ரி பயோடெக் நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவா் பசவநாத், ஸ்பிக் நிறுவனத்தின் முநிலை மேலாளா் எஸ்.பாஸ்கரன், மண்டல மேலாளா் வி.எஸ்.அருணாசலம், பேராசிரியா் சாலிஹா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com