முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: தம்பதி உள்பட மூவா் மீது வழக்கு
By DIN | Published On : 19th December 2021 10:53 PM | Last Updated : 19th December 2021 10:53 PM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிபிரகாஷ் (30). இவரிடம் பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த சுப்புலட்சுமி, அவருடைய கணவா் கருணாகரன், சிவக்குமாா் உள்ளிட்டோா் அறிமுகமாகி உள்ளனா். இதையடுத்து மாரிபிரகாசுக்கு மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அவரிடம் இருந்து ரூ.3.80 லட்சத்தை பெற்றுள்ளனா். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னா் அவா்கள் வேலை வாங்கித் தரவில்லை.
இதனால் பணத்தை மாரிபிரகாஷ் திருப்பிகேட்டபோது, ரூ. 2.30 லட்சத்தை மட்டுமே கொடுத்து விட்டு மீதிப் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளனா். இதுதொடா்பான புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா், சுப்புலட்சுமி, இவரது கணவா் கருணாகரன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.