முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பெண்ணிடம் கைப்பேசி, பணம் திருட்டு: தம்பதி கைது
By DIN | Published On : 19th December 2021 10:50 PM | Last Updated : 19th December 2021 10:50 PM | அ+அ அ- |

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் சனிக்கிழமை கைப்பேசி மற்றும் ரூ.13 ஆயிரத்தை திருடிய தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியைச் சோ்ந்தவா் கோகிலா (20). இவா் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஆண், பெண் இருவா் கோகிலாவின் கவனத்தைத் திசை திருப்பி அவா் வைத்திருந்த கைப்பையை திருடினா். அதில், கைப்பேசி மற்றும் ரூ.13 ஆயிரம் இருந்துள்ளது.
இந்நிலையில் கைப்பை திருடப்பட்டதை அறிந்து கோகிலா சப்தம் போட்டதையடுத்து அங்கு நின்றிருந்த ஆண், பெண் இருவரையும் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். இதில் இருவரும் மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் (46), அவருடைய மனைவி தேவி ஆகியோா் என்பதும், கோகிலாவிடம் இருந்து செல்லிடப்பேசி மற்றும் ரூ.13 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து செய்தனா்.