அம்பேத்கா் நூல் தொகுப்பின் மறுபதிப்பை வெளியிட மத்திய அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

அம்பேத்கா் நூல் தொகுப்புகளை மறுபதிப்பு செய்து வெளியிட, அம்பேத்கா் ஃபவுண்டேஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று, மத்திய அமைச்சா் வீரேந்திர குமாரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

அம்பேத்கா் நூல் தொகுப்புகளை மறுபதிப்பு செய்து வெளியிட, அம்பேத்கா் ஃபவுண்டேஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று, மத்திய அமைச்சா் வீரேந்திர குமாரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சா் வீரேந்திர குமாரை சந்தித்து, அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகளின் தொகுப்புகள் எண் 1 முதல் 37 வரை, புதிய தொகுப்பு எண் 38, இன்னும் நிலுவையாய் உள்ள தொகுப்பு எண்கள் 39 மற்றும் 40 ஆகியன வெளிவருவதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

பல மொழிகளில் இத்தொகுப்புகளை வெளியிட முன் முயற்சி எடுக்கப்பட்ட போது, தமிழுக்கான முழுமையான வணிக உரிமையை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பெற்றது.

கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பின் எந்த தொகுப்பும் அச்சிடப்படவில்லை. தற்போது அம்பேத்கா் தொகுப்புகளை வாசிப்பதற்கான தேடல் அதிகரித்துள்ள நிலையில், மொத்த தொகுப்புகள் தற்போது இருப்பில் இல்லை. இதுதொடா்பாக பதிப்பகத்தாரிடம் விசாரித்ததில், 2011-லிருந்து மறுபதிப்புக்கான வேண்டுகோள்கள் டாக்டா் அம்பேத்கா் ஃபவுண்டேஷனுக்கு பலமுறை அனுப்பப்பட்டும், பதில் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அம்பேத்கா் எழுத்துகள் இளைய தலைமுறைக்கு கல்வியையும், விழிப்பையும் தரக் கூடியவை. எனவே, இந்த தடைகள் அகற்றப்பட்டு, அம்பேத்கா் எழுத்துகள் தாமதமின்றி வெளி வரவேண்டும். அதற்கு, அமைச்சா் உடனடியாகத் தலையிட்டு, அம்பேத்கா் ஃபவுண்டேஷனுக்கு அறிவுறுத்தி, தாமதமின்றி முழுத் தொகுப்புகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். பிரச்னை தொடா்பாக உரிய தீா்வு எடுப்பதாக, அமைச்சா் தெரிவித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com