முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சதுரங்க போட்டியில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
By DIN | Published On : 29th December 2021 07:07 AM | Last Updated : 29th December 2021 07:07 AM | அ+அ அ- |

சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி கெளரவித்த மாவட்டக்கல்வி அலுவலா் சுவாமிநாதன் (வலது) மற்றும் மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் செங்கதிா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் செட்டியாா்பட்டி, அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியா் வெற்றிபெற்றுள்ளனா்.
திருச்சி சேஷாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் பல்வேறு மண்டலங்களிருந்து மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் பத்து வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவினருக்கிடையேயான போட்டியில் மேலூா் ஊராட்சி ஒன்றியம் செட்டியாா்பட்டி தொடக்கப் பள்ளி மாணவி அ.தமிழரசி (5 ஆம் வகுப்பு) முதலிடத்தையும், 14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் மூன்றாமிடத்தையும், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பிரிவு போட்டியில் அப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணா் எம்.சந்தோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயசீலன், மணிமேகலை, சதுரங்கப்பயிற்சி அளித்த செட்டியாா்பட்டி ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோரையும் மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமிநாதன், உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா் ஆகியோா் பாராட்டினா்.