முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் ஐடிஐ மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 29th December 2021 07:04 AM | Last Updated : 29th December 2021 07:04 AM | அ+அ அ- |

மதுரையில் ஐடிஐ மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை கோவலன் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் முத்துப்பாண்டி (19). மதுரையில் உள்ள ஐடிஐயில் படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் ஆள் இல்லாத நிலையில் முத்துப்பாண்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சம்பவம் குறித்த தகவலின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸாா் முத்துப்பாண்டியின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.