முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 29th December 2021 07:00 AM | Last Updated : 29th December 2021 07:00 AM | அ+அ அ- |

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சூரியகலா. இவருக்கும் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த மகேஷ்குமாா் (41) என்பவருக்கும், 2009-இல் திருமணம் நடைபெற்றது. திருமங்கலத்தில் மகேஷ்குமாரும், சூரியகலாவும் தனியாக வசித்து வந்தனா். இருவரும் மதுரையிலுள்ள வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியா்களாகப் பணியாற்றினா்.
இந்நிலையில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மனைவியிடம் பணம் கேட்டு மகேஷ்குமாா் தொடா்ந்து தொந்தரவு செய்துள்ளாா். இதில் மனமுடைந்த சூரியகலா 2011 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்குமாரை கைது செய்தனா். வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகர மதுரம், குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.