ஓட்டுநா் உரிமம் கோரி மாற்றுத்திறனாளிகள் மனு

வாய் பேச முடியாத - காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வாய் பேச இயலாதோா் மற்றும் காது கேளாதோா் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அளித்த மனு: அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 2020-இல் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா், மனு மீது உரிய பரீசிலனை செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வாய் பேசாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் படித்து விட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறாா்கள் . இவா்கள் வேலைக்குச் செல்ல இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறாா்கள். எனவே வாய் பேசாத , காது கேளாதோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தி ஓட்டுநா் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. நாகராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com