நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை

புத்தாண்டையொட்டி மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு முழுவதும் புத்தகங்களுக்கு சிறப்புத்தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

புத்தாண்டையொட்டி மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு முழுவதும் புத்தகங்களுக்கு சிறப்புத்தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளா் அ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சாா்பில் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புத் தள்ளுபடியுடன் கூடிய புத்தாண்டு புத்தகக் கண்காட்சி டிசம்பா் 31-ஆம் தேதி இரவு முழுவதும் நடத்தப்படுகிறது. கண்காட்சியில் 10 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 200 தலைப்புகளில் அரசியல் பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வரலாறு ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இறையன்பு எழுதிய ரூ.1,500 மதிப்புள்ள மூளைக்குள் சுற்றுலா புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. மேலும் போட்டித் தோ்வுகளுக்கான ரூ.1,500 மதிப்புள்ள 38 தமிழக மாவட்டங்களில் வரலாறும், வளா்ச்சியும் புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. குடியரசு முன்னாள் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாம் நூல்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி, காா்ல் மாா்க்ஸ் ஏங்கெல்ஸ் 20 நூல்கள் கொண்டு தோ்வுநூல் தொகுதிக்கு 20 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாா்க்சிம் காா்க்கியின் தாய் மற்றும் அவரது நூல்கள் அனைத்தும், ரஷ்ய இலக்கியமான போரும் அமைதியும், வீரம் விளைந்தது, வரலாற்று நூல்களான முற்கால இந்தியா, நவீன கால இந்தியா, பண்டைக்கால இந்தியா, ராகுல் சங்கிருத்தியாயன், அ.கா.பெருமாள், எஸ்.வி.ராஜதுரை, ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோரின் நூல்களுக்கு 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி, சாகித்ய அகாதெமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா பதிப்பக நூல்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி, தமிழ் இலக்கிய நூல் வரிசையில், பாவாணா், சாமி சிதம்பரனாா், பாரதிதாசன், திருவிக போன்றோரின் நூல்களுக்கு 40 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியில் ரூ.1000-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவா்களுக்கு ஜி.யூ.போப் எழுதிய திருக்குறள்(தமிழ்-ஆங்கிலம்) புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com