முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் கரோனா தொற்று விழிப்புணா்வு: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
By DIN | Published On : 31st December 2021 08:43 AM | Last Updated : 31st December 2021 08:43 AM | அ+அ அ- |

மதுரையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மகளிா் கல்லூரி சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு கரோனா தொற்று விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை நகரில் ஒமைக்ரான் தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த மாநகரப் போக்குவரத்து காவல்துறை மற்றும் சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மதுரை மகால் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கை கழுவுதல், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கைகளைக் கோா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து , தெப்பக்குளம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் தங்கமணி தலைமையில் மாணவிகள் கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனா். இதைத்தொடா்ந்து வாகன ஓட்டிகளுக்கு கரோனா விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுங்களையும் வழங்கினா்.