அரிசி ஆலைகள், செங்கல் சூளைகளில் வருவாய்த் துறையினா் திடீா் ஆய்வு

கொத்தடிமை ஒழிப்புத் தினத்தையொட்டி அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கல்குவாரிகளில் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கொண்ட கூட்டுக் குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கொத்தடிமை ஒழிப்புத் தினத்தையொட்டி அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கல்குவாரிகளில் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கொண்ட கூட்டுக் குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. கொத்தடிமைத் தொழில் முறையை ஒழிக்கவும், கொத்தடிமைத் தொழிலாளா்கள் இருப்பின் அவா்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கும் கோட்டாட்சியா்கள் தலைமையில் காவல், தொழிலாளா் நலம், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேலூா் கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் மதுரை தெற்கு வட்டாட்சியா் அனீஷ் சத்தாா் மற்றும் அலுவலா்கள் குழுவினா் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அங்கு கொத்தடிமைத் தொழிலாளா்களோ, குழந்தைத் தொழிலாளா்களோ பணியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, மதுரை கிழக்கு வட்டம் குன்னத்தூா் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள், மேலூா் வட்டத்தில் உள்ள கல்குவாரிகளிலும் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அரிசி ஆலைகள், செங்கல் சூளை, கல்குவாரி நடத்துவோரிடம் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழில் முறை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com